வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி.. வெளியேறிய ப்ரவீன் காந்தி! - இனிமேல்தான் இருக்கு ஆட்டமே! Biggboss Tamil Season 9

Prasanth K

திங்கள், 13 அக்டோபர் 2025 (10:56 IST)

பிக்பாஸின் பரபரப்பான 9வது சீசனில் முதல் வார எலிமினேஷன் இருக்காது என்று நினைத்த நிலையில் முதல் ஆளாக வெளியேறியுள்ளார் ப்ரவீன் காந்தி.

 

முன்னதாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த நந்தினி அவராகவே வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் எவிக்‌ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி இருந்தால் யார் வெளியேறுவார் என்று விஜய் சேதுபதி கேட்டபோதும் கூட எல்லாரும் அகோரி கலையரசன் அல்லது அப்சரா எவிக்‌ஷன் ஆவார்கள் என்றே கணித்தனர்.

 

ஆனால் ப்ரவீன் காந்தி எவிக்‌ஷன் செய்யப்பட்டார். அவர் வெளியேறியபோது பலரும் அவரை வழியனுப்ப வந்தபோது அவர் அதை தவிர்த்ததும், நான் எங்கேயும் இருப்பேன், சர்வமும் நான் என்று பேசியதும் பலருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 

ஆனால் முதல் வாரத்தில் கேம் சுவாரஸ்யமாக நடக்கவில்லை என்பதை கடந்த இரு நாட்களில் விஜய் சேதுபதி ஹவுஸ்மேட்ஸுக்கு புரிய வைத்திருக்கிறார். கூச்சல் குழப்பம் செய்வது ஆடியன்ஸுக்கு சுவாரஸ்யம் தராது, அதை சுவாரஸ்யமான விதத்தில் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். வாட்டர்மெலன் ஸ்டார் விவகாரத்தில் கம்ருதீனை விஜய் சேதுபதி கண்டித்த விதம், அனைவரிடமும் காட்டிய கறார் முகம், வாட்டர்மெலன் ஸ்டாரின் ஆக்டிவிட்டிகளால் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தது என விஜய் சேதுபதி கடந்த ஆண்டு பிக்பாஸை ஹோஸ்ட் செய்ததை விட இந்த முறை ஆரம்பமே அசத்தியிருக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

முதல் வாரம் முழுவதும் வாட்டர்மெலன் திவாகரே கண்டெண்டாக இருந்து வந்த நிலையில் வரும் வாரங்களில் சக போட்டியாளர்கள் கவனம் ஈர்க்கும் விஷயங்களை செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்