சோசியல் மீடியா போஸ்ட் போட.. சோறு போட்டு ரூ.26.5 லட்சம் சம்பளம்: எங்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (11:56 IST)
மகாராணி இரண்டாம் எலிசபெத் சோசியல் மீடியாவை கவனித்துக்கொள்ள சோஷியல் மீடியா மேனேஜர் தேவை என அறிவித்துள்ளனர். 

 
கடந்த மார்ச் மாதம் மகாராணி இரண்டாம் எலிசபெத்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு துடங்கினார். ராணி எலிசபெத்திற்கு தற்போதைய சமூக வலைதள பயன்பாடு குறித்து அதிகப்படியான பரிச்சியம் இல்லாத காரணத்தால் அவருக்கு உதவ சோஷியல் மீடியா மேனேஜர் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 
 
சோஷியல் மீடியா மானேஜர் பதவிக்கு சமூக வலைதள பக்கங்களை கையாள்வதில் திறமையானவர்களாவும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சியான, துடிப்பாக செயலாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  
பணியில் சேர்பவர்களுக்கு தினமும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுமாம். ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். திங்கள் முதல் வெள்ளி வரை 37.5 மணிநேரம் மட்டுமே பணிபுரிந்தால் போதுமாம். அதோடு, ரூ.26.5 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்