ருமேனியா வான் பரப்பிலும் மர்ம பலூன்.. 10 நிமிடத்தில் மாயமானதால் பரபரப்பு..!

புதன், 15 பிப்ரவரி 2023 (15:20 IST)
ருமேனியா வான் பரப்பிலும் மர்ம பலூன்.. 10 நிமிடத்தில் மாயமானதால் பரபரப்பு..!
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளின் வான் பரப்பில் மர்ம பலூன் பறந்ததாகவும் அவை சுட்டு வீழ்த்தப்பட்டபோது சீனாவின் உளவு பலூன் என்பது தெரிய வந்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் அமெரிக்கா கனடாவை அடுத்து ருமேனியா வான் பரப்பிலும் சந்தேகத்திற்கு இடமான பொருள் பறந்து சென்றதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
ருமேனியாவின் தென்கிழக்கு பகுதியில் விமானப்படையின் கண்காணிப்பு அமைப்பில் மர்ம பலூன் ஒன்று தென்பட்டதாகவும் ஆனால் 10 நிமிடத்தில் அந்த பலூன் மாயமாய் மறந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அந்த பலூன் சுமார் 11 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறந்ததாகவும் அதனை இரண்டு ஜெட் விமானங்கள் விரட்டி சென்ற போது மாயமாய் மறந்து விட்டதாகவும் ருமேனியா அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்