நடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி வந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் இதனை அடுத்து அந்த பெண்ணுக்கும் அவருடைய குழந்தைக்கும் முதலுதவி செய்ய உடனடியாக அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்டன் என்ற பகுதியில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு திடீரென நடுவானில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து விமானத்தில் இருந்த பயணி ஒருவர் டாக்டர் என்பதால் அவருடைய உதவியுடன் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இந்த பிரசவத்திற்கு விமான பணி பெண்களும் உதவி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவமாக பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தை பிறந்ததும் இருவருக்கும் உடனடியாக முதல் உதவி செய்ய வேண்டும் என்பதால் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க மருத்துவர் கேட்டுக் கொண்டார். இதனை அடுத்து அருகில் உள்ள விமான நிலையத்தில் அனுமதி பெற்று உடனடியாக விமானம் இறக்கப்பட்டு, அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.