மாயமான மலேசிய விமானம் MH370.. 10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த ஆதாரம்..!

Mahendran

புதன், 6 மார்ச் 2024 (18:34 IST)
கடந்த 2014ம் ஆண்டு மலேசிய விமானம் மாயமான நிலையில் அந்த விமானம் குறித்த ஆதாரங்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசிய விமானம் MH370 என்ற விமானம் திடீரென மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை என்பதும் அதில் பயணம் செய்த பயணிகள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த விமானம் குறித்து அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது

இதனை அடுத்து மாயமான MH370 விமானத்தை தேட அமெரிக்க கடல் ஆய்வு நிறுவனம் மற்றும் மலேசிய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் இரு நாடுகளும் அனுமதித்தால் மாயமான MH370 விமானத்தை தேடி தருவோம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

ஆனால் அதே நேரத்தில் என்ன ஆதாரமும் கிடைத்தது என்பதை இந்நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்