விமானத்தில் இருந்து கழன்று விழுந்த விமான டயர்!

Sinoj

வெள்ளி, 8 மார்ச் 2024 (15:02 IST)
அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் இருந்து டயர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து  ஜப்பானுக்கு யுனைட்டட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது.
 
இதில், 235 பயணிகள் மற்றும் ஊழியர்கள் பயணித்தனர்., இந்த விமானம் டேக் ஆப் ஆனபோது, விமானத்தில் இருந்து ஒரு டயர் கழண்று தரையில் விழுந்தது.
 
விமான  நிலைய பார்க்கிங்ஸ் பகுதியில் விமான டயர் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. குறிப்பாக அந்த டயர் ஒரு காரின் மீது விழுந்து பின்னால் இருந்த வேலியில் மோதி நின்றது. இதில் கார்கள் சேதமடைந்துள்ளன.
 
ஆனால், இவ்விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகிறது.
 
மேலும், விமானத்தில் 6 டயர்களில்  ஒரு டயர் இல்லாமல் தொடர்ந்து பறந்த விமானம், பாதுகாப்பு காரனமாக லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 
இவ்வாறு தரையிறக்கப்ப்ட்ட விமானம் ஓடுபாதையில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அதில் பயணித்த பயணிகளுக்கு விமான நிறுவனம் வேறு விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்ததாக தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்