அமெரிக்காவில் காரை வேகமாக ஓட்டி வந்து ரோந்து வாகனத்தில் மோதிய சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில காலமாகவே துப்பாக்கிசூடு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. துப்பாக்கி என்ற வார்த்தையே அமெரிக்க மக்கள் மனதில் பீதியை ஏற்படுத்தும் வகையில் படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அதை கண்ட ரோந்து போலீஸார் காரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் வேகமாக வந்த அந்த கார் ரோந்து வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் கார் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் காரை ஓட்டிய 13 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான்.
மேலும் காரில் இருந்த இரண்டு சிறுவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில் சிறுவர்கள் அந்த காரை திருடிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. எனினும் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.