இலை தழைகளை சாப்பிட்டு வாழும் பாகிஸ்தானியர்!!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (12:12 IST)
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் குஜ்ரன் வாலா மாவட்டத்தை சேர்ந்தவர் மெக்மூத் பட். 


 
 
கடந்த 25 ஆண்டுகளாக இவர் உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. மாறாக மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்கிறார்.
 
தினமும் ரூ.600 சம்பாதிக்கும் இவருக்கு விதம் விதமான உணவு பண்டங்கள் மீது நாட்டம் இல்லை.
 
இது குறித்து அவர் கூறுகையில், 25 வயதில் நான் வறுமையில் வாடினேன். வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனவே சாப்பிட்டிற்கு வழியின்றி பட்டினி கிடந்தேன். 
 
அப்போது இலை தழைகளை தின்று பசி ஆறினேன். அதுவே எனக்கு பழக்கமாகி விட்டது. இப்போது பசி எடுக்கும் போது இலை தழைகளை சாப்பிட்டு உயிர் வாழ்கிறேன் என்றார்.
அடுத்த கட்டுரையில்