நான் ஜெயலலிதாவின் மகன்: மாதவன் பொளேர்!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (11:52 IST)
எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற கட்சியை சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன். எம்ஜெதிமுகவின் தலைவரான மாதவன் கூறியுள்ள கருத்து ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் நான் தான் அவரது அரசியல் வாரிசு என களம் இறங்கினார் அவரது அண்ணன் மகள் தீபா. பின்னர் எம்ஜிஆர் அம்மா தீபா என்ற பேரவையை உருவாக்கினார் தீபா. அதன் நிர்வாகிகள் நியமனத்தில் பல்வேறு குழப்பங்களும், சர்ச்சைகளும் உருவாகியது.
 
இந்நிலையில் ஒருநாள் ஜெயலலிதா சமாதியில் செய்தியாளர்களை சந்தித்த தீபாவின் கணவர் மாதவன், தனது மனைவியை சுற்றி தீய சக்திகள் இருப்பதால் அவரால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எனவே நான் விரைவில் ஒரு புதிய கட்சியை தொடங்க உள்ளேன் என்றா அதிரடியாக.
 
இதனையடுத்து தீபாவுக்கும், மாதவனுக்கும் இடையே மோதல் ஆரம்பமானது. தீபா தனது ஆர்கே நகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் கூட கணவர் மாதவனின் பெயரை குறிப்பிடவில்லை. இதனையடுத்து தீபாவுக்கு ஆதரவாக பேசி வந்தார் மாதவன், தீபாவை முதல்வராக்குவதே தனது லட்சியம் என கூறிவந்தார்.
 
ஆனாலும் தீபாவுக்கும், மாதவனுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற கட்சியை ஆர்ம்பித்தார் மாதவன். இதனையடுத்து பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் மாதவன்.
 
அப்போது பேசிய மாதவன், தீபாவின் பின்னால் இருக்கும் தீய சக்திகளிடம் இருந்து அவரை காக்க இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தீபா தனது பேரவையை கலைத்துவிட்டு இந்த கட்சியில் வந்து சேர்ந்தால் வரவேற்பேன். தீபா ஜெயலலிதாவின் மருமகள் என்றால் நான் ஜெயலலிதாவின் மகன் முறையாகும் என்றார் அதிரடியாக.
அடுத்த கட்டுரையில்