உங்களுக்கு ஓகேன்னா ஆம்புலன்ஸ் அனுப்புறோம்! – பிரதமருக்கு பாகிஸ்தான் அறக்கட்டளை கடிதம்!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (10:40 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில்இந்தியாவுக்கு உதவ விரும்புவதாக பாகிஸ்தான் அறக்கட்டளை கடிதம் அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் மாநிலங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த எதி அறக்கட்டளை இந்தியாவிற்கு 50 ஆம்புலன்ஸ்களை வழங்க விரும்புவதாக தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்