குழந்தைகளின் மூளை வளர்ச்சி சிறப்பாக உதவும் காலிபிளவர் !!

சனி, 24 ஏப்ரல் 2021 (00:40 IST)
காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. 
 
இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. 
 
குழந்தை மூளை வளர்ச்சி காலிபிளவரில் கோலைன் எனப்படும் ஒரு வேதிப்பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த கோலின் எனப்படும் வேதிப்பொருள் வைட்டமின் டி சத்தை சேர்ந்ததாகும். 
 
கோலைன் சத்து மூளையின் வளர்ச்சி மற்றும் செயலாக்க திறனுக்கு மிகவும் உதவுகிறது. அதிலும் குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்கள் கோலைன் சத்து நிறைந்த  காலிஃபிளவரை உண்பதால், வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் செயல் திறன் சிறப்பாக இருக்க உதவுகிறது. 
 
கோலைன் அதிகம் நிறைந்துள்ள காலிஃபிளவர்களை அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஏற்பட்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களின் ஞாபகத் சக்தி மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 
காலிபிளவரில் கோலைன் எனப்படும் ஒரு வேதிப்பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த கோலின் எனப்படும் வேதிப்பொருள் வைட்டமின் டி சத்தை  சேர்ந்ததாகும். 
 
கருவுற்றிருக்கும் பெண்கள் கோலைன் சத்து நிறைந்த காலிஃபிளவரை உண்பதால், வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் செயல் திறன்  சிறப்பாக இருக்க உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்