பகத்சிங்கை போற்றி முழங்கிய பாகிஸ்தானியர்கள்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (09:17 IST)
இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கிம் நினைவு நாளான நேற்று அவரை போற்றி பாகிஸ்தான் மக்கள் முழக்கங்களை எழுப்பியது வைரலாகியுள்ளது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து தீரமாக பலர் போராடினர். அவர்களில் நாடு முழுவதும் வீரமுகு போராட்டக்காரராக புகழப்படுபவர் பகத்சிங். ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிகளால் பகத்சிங் மற்றும் அவரது நண்பர்களான ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் லாகூரில் மார்ச் 23, 1931ல் தூக்கிலிடப்பட்டனர்.

இந்த லாகூர் தற்போது பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ளது. இந்நிலையில் நேற்று பகத்சிங் நினைவு நாளில் லாகூரில் அவர் தூக்கிலிடப்பட்ட சத்மான் சவுக் பகுதியில் திரண்ட பாகிஸ்தானிய இளைஞர் அமைப்பினர் “பகத்சிங் ஜிந்தாபாத்” என்ற முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்