தங்கத்தை கடனாக கொடுங்கள்: பொதுமக்களிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (11:50 IST)
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்க பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை கடனாக வாங்க முடிவு செய்துள்ளது
 
பாகிஸ்தான் ரிசர்வ் வங்கியில் கணக்கு படி அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 17 பில்லியன் டாலர் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நிதி அமைச்சரிடம் ஆலோசனை செய்த பிரதமர் இம்ரான்கான்,  வர்த்தக வங்கிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை டெபாசிட் பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்த்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்
 
ஆனால் பாகிஸ்தான் அரசு கோரிக்கையை ஏற்று அந்நாட்டு மக்கள் தங்கத்தை டெபாசிட் செய்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்