வடகொரியா அணு ஆயுத சோதனை கூடம் தரைமட்டம்: வைரல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (15:11 IST)
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும் வடகொரியாவும் அணு ஆயுத கொள்கை விஷயத்தில் மோதிக்கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்தது. 

 
 
அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் டுவிட்டரிலும் கருத்துமோதல்களை வெளிப்படுத்தினர்.
 
ஆனால், வடகொரிய அதிபரிடம் ஏற்பட்ட சில திடீர் மாற்றங்களால் அமைதியான சூழ்நிலை திரும்பியது. வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக்கொள்வதாகவும் தெரிவித்தது. 
 
அதன்படி வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்ட ரகசிய சுரங்கங்களையும் தகர்த்தி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்தது.
 
அதன்படி, இதனை நேரில் வந்து பார்க்குமாறு உலகின் முக்கிய ஊடகங்களுக்கு வடகொரியா அரசு அழைப்பு விடுத்தது. நேற்று அந்த இடமும், சுரங்கங்களும் தகர்க்கப்பட்டது. இது குறித்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 
 
இதோ அந்த வீடியோ...
 

நன்றி: RT

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்