அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா: சந்திப்பில் புதிய திருப்பம்!
புதன், 16 மே 2018 (11:45 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்திப்பு ஜூன் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் னைவரின் கோபத்தை சம்பாதித்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்று அறிவித்தார்.
இந்நிலையில், தென்கொரியாவில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா ராணுவ ஒத்திகை வடகொரியாவை ஆத்திரம் அடைய செய்துள்ளது என தெரிகிறது.
இதனால், இன்று தென் கொரியா உடன் நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. மேலும், அணு ஆயுத திட்டங்களை முழுமையாக கைவிட அமெரிக்க வலியுறுத்தினால் பேச்சு வார்த்தை ரத்தாகும் என வடகொரியா மிரட்டும் தோனியில் எச்சரித்துள்ளது.