ரஷ்யாவுக்கு ஆயுதம் விக்கல.. வித்தாலும் கேக்க முடியாது! – அமெரிக்காவுக்கு வடகொரியா பதில்!

வியாழன், 22 செப்டம்பர் 2022 (08:46 IST)
உக்ரைன் போருக்கு ரஷ்யாவிற்கு வடகொரியா ஆயுதங்கள் வழங்குவதாக அமெரிக்கா வைத்த குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி ஒன்றில், உக்ரைன் மீதான போரால் ரஷ்யாவின் ஆயுத இருப்பு குறைந்து விட்டதாகவும், அதனால் வடகொரியாவிடம் ஆயுதங்களை ரஷ்யா கொள்முதல் செய்வதாகவும் குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டை வடகொரியா மறுத்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் ‘வடகொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களையோ, வெடிமருந்துகளையோ ஏற்றுமதி செய்ததில்லை. ஏற்றுமதி செய்ய நாங்கள் திட்டமிடவும் இல்லை.

ஆயுத கொடுக்கல் வாங்கல் குறித்து அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதை நிறுத்துமாறு எச்சரிக்கிறோம். அதேசமயம் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் உரிமை வடகொரியாவுக்கு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்