கொரோனா 3.0... உருமாறியதில் இருந்து உருமாறிய வைரஸ்!!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (14:30 IST)
உருமாறிய கொரோனா வைரஸில் இருந்து மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளது. 

 
பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ், சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ், 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடியது என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸில் இருந்து மாறுபட்ட புதிய கொரோனா வைரஸ் ஜப்பானில் கண்டறியப்பட்டுள்ளது. 
 
பிரேசிலில் இருந்து டோக்கியோ விமான நிலையத்திற்கு வந்த 4 பேருக்கு இவ்வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. உடனடியாக அந்த 4 பேரையும் தனிமைப்படுத்திய ஜப்பான் சுகாதாரத் துறை அதிகாரிகள், மாறுபட்ட கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்