இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுடன், அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா இணைந்து ஆராய்ச்சி செய்யவிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவுக்கு 2.1 கி.மீ, தொலைவில் நெருங்கிய போது சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்பு விக்ரம் லேண்டர் தரையிறங்கவிருந்த இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்ரோவின் இந்த சாதனையை குறித்து உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் வந்த வன்ணம் உள்ளன. இதனிடையே அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா, தனது டிவிட்டர் பக்கத்தில் சந்திரயான் 2 முயற்சிக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளது. மேலும் அந்த டிவிட்டர் பக்கத்தில், ”விண்வெளி மிகவும் கடினமானது.