பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் பிரதமர் இம்ரானங்கான் தலைமையியான தெக்ரீக் இ இன்சாப் கட்சியினர் லாகூரி ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்தனர்.
அப்போது, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்த மோதலில், அலிபிலால் என்ற தொண்டர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.