மீண்டும் படமாகிறது மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை – எகிறும் எதிர்பார்ப்பு

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (13:20 IST)
பாப் உலகின் முடிசூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு மூன்றாவது முறையாகப் படமாக இருக்கிறது.

இருக்கும்போதும் இறந்த போதும் பல சாதனைகளையும் மர்மங்களையும் விட்டுச் சென்ற பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு மூன்றாவது முறையாக திரைப்படமாக இருக்கிறது. கிரஹாம் கிங் என்ற தயாரிப்பாளர் அதற்கான அனுமதியை பெற்றுள்ளார்.

மைக்கேல் ஜாக்சன் மேல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொண்டது. கருப்பு நிறத்தை வெள்ளை நிறமாக மாற அறுவை சிகிச்சை செய்துகொண்டது பல சர்ச்சைகள் உள்ள நிலையில் அவற்றுக்கெல்லாம் இந்த படத்தில்  விளக்கம் அளிக்கபப்டும் எனத் தெரிகிறது. ஏற்கனவே இரண்டு முறை மைக்கேல் ஜாக்சனைப் பற்றிய திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் இந்த படத்துக்கு கிளாடியேட்டர் உள்ளிட்ட படங்களின் திரைக்கதை ஆசிரியர் ஜான் லோகன் திரைக்கதை எழுதுவதால்  எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்