75 லட்சத்தை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (07:26 IST)
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போது உலக கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை தாண்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . அதாவது உலகம் முழுவதும் 75,89,101 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள்து.
 
அதேபோல் ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் நாட்டில் நேற்று ஒரே நாளில் 30,465 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டின் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது 
 
பிரேசில் நாட்டை அடுத்து அமெரிக்காவில் ஒரே நாளில் 23,225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாவும், மூன்றாவதாக இந்தியாவில் 11108 பெரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நான்கு நாடுகள் முதல் நான்கு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பில் இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது என்பதும் ஒரு அதிர்ச்சி தகவல் ஆகும். உலகளாவிய கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும், உள்ள நிலையில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து, 6வது இடத்தில் ஸ்பெயின், ஏழாவது இடத்தில் இத்தாலி, எட்டாவது இடத்தில் பெரு, ஒன்பதாவது இடத்தில் ஜெர்மனி மற்றும் பத்தாவது இடத்தில் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்