கழிப்பறையில் 15 நிமிடங்களுக்கு மேல் அமரக்கூடாது : மீறினால் என்னாகும் தெரியுமா ?

Webdunia
வியாழன், 17 அக்டோபர் 2019 (19:43 IST)
சீனா நாட்டில் உள்ள பொதுக் கழிப்பறையில் 15 நிமிடங்களுகு மேல் உட்காந்திருந்தால் அலாரம் அடிக்கும் வகையில் அந்தாட்டு அரசு ஒரு ஸ்மார்ட் டாய்லெட் அலாரம் உருவாக்கியுள்ளது.
பொதுவாகவே வெளிநாட்டினர் ரெஸ்ட் ரூம் எனப்படும் டாய்லெட்டுகளுக்கு கழுவறைக்கு சென்றால் அங்கு எப்படியும் கால் மணிநேரம் அரைமணி நேரம் செலவிடுவார்கள். சிலர் நேரத்தை பிரயோஜனப்படுத்த கையில் நாளிதழ்கள் எடுத்துச் சென்று படிப்பார்கள். அதனால் மேலும் சில நிமிடங்கள் தாமதாகும்.  அதனால் அடுத்தவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். 
 
இந்நிலையில், இனிமேல், சீனா நாட்டில், பொதுக்கழிப்பறையில் 15 நிமிடங்களுக்கு மேல் யாரும் அமர்ந்திருந்ததால், புதிதாக பொருத்தபட்ட ஒரு டாய்லெட் அலாரம் அடிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டாய்லெட்டில் தண்ணீர்   செலவழித்தாலும், சுத்தமாக இல்லை என்றாலும் அந்தக் கருவி தானாக அலாரம் அடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் சீன அரசின் இம்முயற்சி மக்களின் வரவேற்பை பெருமா இல்லையா என்பது இனிமேல் தான் தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்