கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

Siva

வெள்ளி, 9 மே 2025 (08:36 IST)
பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் உள்ள 15 ராணுவ மையங்கள் மீது   நடத்தியது. ஆனால், இந்திய பாதுகாப்பு படை அதனை முற்றிலும் தடுத்து நின்றது.
 
இதற்கு பதிலாக, பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய ரேடார் மையங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக, லாகூர் பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பு மையம் அழிக்கப்பட்டது என கூறப்படுகிறது.
 
இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, அரபிக்கடலில் காத்திருக்கும் இந்தியாவின் உயர்நுட்ப போர் கப்பலான விக்ராந்த், பாகிஸ்தானின் கராச்சி நகரை குறிவைத்து ஏவுகணைகளை செலுத்தியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
இதன் விளைவாக, கராச்சி துறைமுகத்தில் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் தாக்குதல் மற்றும் தீவிபத்து சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் பரவி வருகின்றன.
 
இதே நேரத்தில், இந்த தாக்குதல் குறித்து இந்திய அரசு எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. சில தகவல்கள், இவை இந்திய தாக்குதல் அல்ல, தீ விபத்து காரணமாக ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்