பாகிஸ்தான், இந்திய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த 50 ட்ரான்கள் மற்றும் ஏவுகணைகளை வீசியது. இந்த முயற்சியில் ஒரு ட்ரானும், ஏவுகணையும் இந்தியாவை பாதிக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பாகிஸ்தான் தனது ஆயுத கையிருப்பு மற்றும் வான்படை திறனில் எவ்வளவு பின்னடைவை சந்திக்கிறது என்பதும், இந்தியா பாதுகாப்பு துறையில் எவ்வளவு முன்னேற்றமடைந்துள்ளது என்பதும் வெளிச்சமாய் தெரிய வந்துள்ளது.
இந்தியாவுக்கு ரஷ்யா வழங்கிய "எஸ்-400" என்ற உயர் தொழில்நுட்ப ஆயுதமே தற்போது "சுதர்சன சக்கரம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆயுதத்தை வாங்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும், மோடி அரசு அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அதை பெற்றது. அந்த ஆயுதமே இப்போது இந்தியாவை பாதுகாத்து வருகிறது.