2026ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி.. அடித்து சொன்ன விஜய்..!

Siva

வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (19:26 IST)
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், அதன் தலைவர் விஜய் தனது உரையில், திமுக மற்றும் பாஜக-வை கடுமையாக விமர்சித்து பேசினார்.
 
நாம் இந்தியாவின் மக்கள் சக்தி கொண்ட வெகுஜனப்படை" என்று குறிப்பிட்ட விஜய், "மாபெரும் மக்கள் சக்தி அணிதிரண்டு நிற்கும் போது, இந்த அடிமைக் கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் என்ன?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், தங்கள் கட்சி, "சுயம் இழந்த கூட்டணியாக இருக்காது, சுயமரியாதை கூட்டணியாக இருக்கும்" என்று உறுதியளித்தார். ஆர்எஸ்எஸ்-க்கு அடிபணிந்துவிட்டு, மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக தவெக இருக்காது என்று மறைமுகமாக பாஜக மற்றும் திமுக-வை சாடினார்.
 
2026 சட்டசபைத் தேர்தலில் யாருடன் போட்டி என்ற கேள்விக்கு, "ஒரே பதில் தான், சஸ்பென்சில் சஞ்சாரம் செய்யுங்கள்" என்று கூறிய விஜய், "2026-ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று தவெக. இன்னொன்று திமுக" என்று தீர்க்கமாக பேசினார்.
 
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசிய விஜய், "எம்.ஜி.ஆர் யார் தெரியுமா? அவர் மாஸ் என்றால் என்னவென்று தெரியுமா? அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் சி.எம். சீட்டை பற்றி ஒருவராலும் நினைத்து பார்க்க முடியவில்லை" என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர். எதிரிகளையே கெஞ்ச வைத்தவர் என்றும் விஜய் புகழ்ந்து பேசினார். 
 
இவ்வாறு விஜய் பேசினார்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்