போர் பதற்றம் எதிரொலி; பஞ்சாப் - டெல்லி ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தம்..!

Siva

வெள்ளி, 9 மே 2025 (07:24 IST)
தர்மசாலா மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி ஐபிஎல் போட்டி, போர் பதற்றம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றுள்ளது.
 
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 10 ஓவரில் 122 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ப்ரியன்ஸ்  ஆர்யா மற்றும்  ப்ரம்சிம்ரன் சிங் முறையே 70 மற்றும் 50 ரன்கள் எடுத்தனர். ஆட்டம் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்த வேளையில், எல்லை பகுதியான மாநிலங்களில் ஏற்பட்ட போர் பதற்றத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
 
இதன் தாக்கமாக, போட்டி நடைபெற்று கொண்டிருந்த மைதானத்திலும் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களால் போட்டி நிறுத்தப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
 
இந்த முடிவினால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. தற்போது பஞ்சாப் அணி 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் உள்ளன.
 
இந்நிலையில், இன்று லக்னோ மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுமா என்பது சூழ்நிலையை பொறுத்தே தெரியும் எனவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்