மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், அதன் தலைவர் விஜய் தனது அரசியல் எதிரிகள் யார் என்பதையும், தனது கட்சியின் நிலைப்பாட்டையும் தெளிவாக விளக்கினார்.
விஜய் தனது உரையில், "நமக்கு ஒரே கொள்கை எதிரி, ஒரே அரசியல் எதிரி தான். நமது கொள்கை எதிரி பாஜக, ஒரே அரசியல் எதிரி திமுகதான்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
"பொய் வாக்குறுதிகள் கொடுத்து திமுக எல்லோரையும் ஏமாற்றுகிறது" என்று குற்றம் சாட்டினார். மேலும், தனது அரசியல் வருகை அடைக்கலம் தேடி வந்தது அல்ல என்றும், "படைக்கலனுடன் வந்துள்ளேன்" என்றும் குறிப்பிட்டார்.
மாபெரும் இளைஞர்கள் நம்முடன் இருக்கிறார்கள். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. நமது கொள்கையில் எந்த சமரசமும் இல்லை. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும்" என்று கூறினார்.