மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜுனா திமுக அண்ணாவின் கொள்கையிலிருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
மதுரை தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய ஆதவ் அர்ஜுனா “கருணாநிதி தன்னை சுற்றியுள்ள 10 குடும்பங்களை சேர்த்து ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். ஆனால் மு க ஸ்டாலின் அந்த 10 குடும்பங்களை ஒழித்துவிட்டு தனது இரண்டு குடும்பத்தை மட்டும் வளர்த்துள்ளார். குடும்பமாக ஊழல்களை உருவாக்கி சமூகநீதியை மறந்து திமுக செயல்பட்டு வருகிறது. இந்த மாநாட்டை சரியாக நடக்கவிடாமல் செய்ய அமைச்சர் மூர்த்தி பல தடைகளை ஏற்படுத்தினார். அதை தவெக நிர்வாகிகள் தவிடுபொடியாக்கி ஒன்று சேர்ந்துள்ளனர்.
அமைச்சர் மூர்த்தி என்ன சமூகநீதி காவலரா? ஒட்டுமொத்த ஊழலையும் குடும்பத்திற்கு அளிக்கக்கூடிய அமைச்சரவையை திமுக உருவாக்கியுள்ளது. அண்ணாவின் கொள்கைகளில் இருந்து திமுகவும், மு க ஸ்டாலினும் விலகிவிட்டனர். அண்ணாவின் கொள்கையை கடைபிடிக்கும் ஒரே தலைவர் விஜய் மட்டும்தான்.
அதேபோல அதிமுகவும் எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டிய பாதையிலிருந்து தடம் மாறி சென்று பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் பின்புறமாக ஆட்சியை பிடிக்க பாஜகவுக்கு உதவி வருகிறது.
அண்ணா, எம்ஜிஆர் கொள்கைகளை உள்வாங்கி அரசியல் வெற்றியாக மாற்றி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சர் ஆவார்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K