அதில், "இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிடமாட்டோம்; இது எங்கள் வேலை அல்ல," என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து, அமெரிக்கா யார் பக்கமும் இல்லை என்பதைக் காட்டுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பகல்காம் பகுதியில், கண்மூடித்தனமாக பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பாகிஸ்தான், இந்தியா மீது பதிலடியாக தாக்குதல் நடத்த முயன்ற நிலையில், இந்தியா அதை முற்றிலும் தடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், நேற்று ஊடகத்திற்கு பேட்டி அளித்த அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ், இந்தியா, பாகிஸ்தான் போரில் அமெரிக்கா தலையிடாது என்றும், அது எங்கள் வேலையல்ல என்றும் தெரிவித்தார். இதனால் பாகிஸ்தான் உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.