செவ்வாய் கிரகத்தில் உப்பு ஏரியா?? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அதிசயம்

Arun Prasath
சனி, 19 அக்டோபர் 2019 (16:39 IST)
அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே உப்பு ஏரி உள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

3 பில்லியன் ஆண்டுகளுக்கு கேல் க்ரேட்டர் பள்ளத்தில் இருந்த ஏரி, 95 மைல் அகலமுள்ள பாறை படுகை ஒன்று இருந்ததாக ஆராய்ச்சியில் தெரியவந்தது. கடந்த 2012 முதல் நாசா கியூரியாசிட்டி ரோவர் மூலம் அதனை மேலும் ஆராய்ந்து வருகின்றனர்.

பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கல் தாக்கியபோது கேல் பள்ளம் உருவானதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது பூமியை போலவே செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருந்துள்ளன என அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மெல்லியதாக மாறியதால் செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் நிலைத்திருக்காமல் ஆவியாகியுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்