இந்த ஒப்பந்தத்திற்கு குர்து ஒய்பிஜி கட்டுப்பட்டு நடக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. சண்டை மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் எல்லை நகரங்களான ராஸ் அல்-அயின் மற்றும் டால் அப்யாட்டுக்கு இடையிலான பகுதியில் குர்துக்களின் தலைமையிலான துருப்புகள் இந்த ஒப்பந்தத்தை கடைபிடிக்கும் என்று தளபதி மஷ்லௌம் கோபானி கூறியுள்ளார்.
கடந்த எட்டு நாட்களில், சிரியாவில் மட்டும் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்று லட்சத்திற்கு மேலானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் இது கூறியுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்தால் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டர் பதில் தெரிவித்திருக்கிறார்.