10 லட்சத்தை அள்ளிக்கொண்டு போன பூசணிக்காய்!!

Arun Prasath

புதன், 16 அக்டோபர் 2019 (13:51 IST)
உலக அளவிலான பூசணிக்காய்களுக்கான எடை போடும் போட்டியில், 10 லட்சம் ரூபாயை அள்ளிக்கொண்டு போனது ராட்சத பூசணிக்காய்.

கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவின் ஹாஃப் மூன் பே-ல் உலக அளவிலான ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி நடைபெற்றது. 46 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டியில் ஏராளமானோர் தனது விளைநிலத்தில் விளைந்த பூசணிக்காயோடு கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ஒரு பவுண்டுக்கு 7 டாலர் என பரிசு தொகை விதிக்கபட்ட நிலையில், லியோனர்டோ யூரேனா என்பவர் விளைவித்த பூசணிக்காய் 2,175 பவுண்டுகள் எடை கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட 1000 கிலோ.

இதை தொடர்ந்து அவருக்கு முதல் பரிசாக, 15,225 டால்ர்கள், அதாவது இந்திய ருபாய் மதிப்பு படி கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.  இது குறித்து யுரேனாவிடம் கேட்டபோது, “இதற்காக நான் கோடை காலத்தில் அல்லும் பகலும் தூங்காமல் கஷ்டப்பட்டேன் எனவும். வாழ்க்கையில் எதுவும் சுலபம் இல்லை” எனவும் கூறியுள்ளார். இந்த ராட்சத பூசணிக்காயை அனைவரும் கண்டு வியந்துபோய் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்