சீனாவிலிருந்து பரவும் புதிய நோய்! – இழுத்து மூடப்பட்ட மங்கோலியா!

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (13:17 IST)
சீனாவின் யுனான் பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் பாதிப்பிலிருந்தே உலக நாடுகள் மீளாத சூழலில் சீனாவில் புதிய புதிய நோய்கள் பரவுவதாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சீனாவின் யுனான் பிராந்தியத்தில் மெங்காய் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு புபோனிக் பிளேக் நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் உள்ள 21 மாகாணங்களில் 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து புபோனிக் ப்ளேக் நான்காம் நிலை அவசர நிலையை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிளேக் அதிகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்