இந்த வழக்கில் அறிக்கை அளித்துள்ள வங்கிகள் அனில் அம்பானிக்கு சொந்தமான சொகுசு பங்களாக்கள், கார்கள், அவரது மனைவியின் ஹெலிகாப்டர் என அவரிடம் ஏராளமான சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தன. இந்த வழக்கில் அனில் அம்பானி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர் தனக்கு சொந்தமாக எந்த சொத்தும் இல்லையென்றும், சொத்துக்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் பெயரிலேயே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மீடியாக்கள் தான் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போல பெரிதுப்படுத்தி காட்டுகிறார்கள். நான் மிகவும் எளிய வாழ்க்கை வாழ்கிறேன். இந்த வழக்கிற்கே எனது மனைவியின் நகைகளை விற்றுதான் செலவு செய்கிறேன் என கூறியுள்ளார்.