அதிபருடன் வீடியோ கான்ஃபிரன்ஸ்; கேமரா ஆஃப் என ஜாலி குளியல்: WFH அலப்பறைகள்!!

Webdunia
செவ்வாய், 19 மே 2020 (16:30 IST)
அதிபருடனான வீடியோ கான்ஃபிரன்ஸின் போது கேமரா ஆஃப் செய்துவிட்டதாக எண்ணி ஒருவர் குளிக்க சென்றது வைரலாகி வருகிறது. 
 
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகள் ஊரடங்கால் முடங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலானோர் Work From Home (வீட்டில் இருந்து வேலை) செய்து வருகின்றனர். தேவைப்படும்போது வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் வீட்டில் இருந்தவாரே மீட்டிங் நடத்திகொள்கின்றனர். 
 
அவ்வாறான் மீட்டிங்கின் போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சாவோ பாலோ மாநிலத்தின் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவரான பாலோ ஸ்காஃப், பிரேசிலில் ஊரடங்கு தாக்கம் குறித்து விவாதிக்க அதிபர் போல்சொனாரோ மற்றும் பிற முக்கிய நபர்களுடன் வீடியோ காலில் இணைந்துள்ளார். 
 
அந்த வீடியோ கான்ஃபரன்ஸில் இருந்த ஒருவர் வீடியோ கால் ஆப் செய்ததாக நினைத்து குளிக்க துவங்கியுள்ளார். ஆனால் அவர் குளிக்கும் காட்சி வீடியோவில் தெரிந்திருக்கிறது. இதனை கவனித்த அதிபர் ஆலோசனையில் குறுக்கிட்டு நிலைமையை கூறியுள்ளார். 
 
இருப்பினும் இந்த வீடியோ கான்ஃபிரன்ஸின் ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்