வித்தியாசமான செக்ஸ் திருப்தி வேண்டும் என்பதற்காக ஒரு ஆண் தனது ஆணுறுப்பில் செலுத்தி வைத்திருந்த ஊசிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் வசிக்கும் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சமீபத்தில் தனது ஆணுறுப்பில் அதிக வலி ஏற்பட்டதாலும், சிறுநீர் கழிக்கும் போது இரத்தம் வெளியேறியதாலும் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ஆணுறுப்பில் 15 ஊசிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்த ஊசிகளை அகற்றினர். ஒவ்வொரு ஊசியும் சுமார் 5 செ.மீ., (1.96 இன்ச்) முதல் 10 செ.மீ., (3.94 இன்ச்) வரை நீளம் இருந்தது. கடந்த ஒரு வருடமாக அந்த ஊசிகள் அவரது ஆணுறுப்பிலேயே இருந்துள்ளது.
வித்தியாசமான செக்ஸ் திருப்தி வேண்டும் என்பதற்காக இப்படி செய்தேன் என அந்த வாலிபர் கூறியுள்ளார்.