மருந்து கொடுத்து நோயாளிகளை போட்டு தள்ளிய ஆண் செவிலியர்!!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (15:43 IST)
ஜெர்மனியில் ஆண் செவிலியர் ஒருவர் நோயாளிகளுக்கு மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்தை அளித்து 86 பேரை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
நீல்ஸ் ஹீகல் என்பவர் பல வருடங்களாக மருத்துவதுறையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது ஆசைக்காக சுமார் 90 நோயாளிகளுக்கு மாரடைப்பு வரும் மருந்துகளைக் கொடுத்து, பிறகு தன் சொந்த முயற்சியில் நோயாளிகளை குணப்படுத்த முற்பட்டுள்ளார்.
 
ஆனால், இதில் பலரும் இறந்துள்ளனர். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அவர் விசாரணையின் போது கூறிய செய்திகள் வெளியாகியுள்ளது.
 
நீல்ஸ், நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் மருந்தை ஊசி மூலம் ஏற்றி பிறகு அவர்களைப் பிழைக்க வைப்பதில் தனக்கு த்ரில் இருந்ததாகவும் ஹீரோ ஆகும் விருப்பம் தன்னிடம் இருந்ததாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.
 
இந்த வழக்கில் ஒரு முடிவு கொண்டு வர சுமார் 134 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில் 84 பேர் இவரால் இறந்தவர்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்