சிங்கப்பூரில் தமிழருக்கு இன்று தூக்கு தண்டனை.. மனித உரிமைகள் அமைப்பு நிறுத்த முயற்சி..!

Siva

வியாழன், 20 பிப்ரவரி 2025 (09:08 IST)
மலேசியாவைச் சேர்ந்த தமிழருக்கு,  சிங்கப்பூரில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கின்ற நிலையில், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு இந்த தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது.

மலேசியாவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி இளைஞர் பன்னீர்செல்வம் என்பவர், போதைப்பொருள் கடத்தியதாக 2014 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூர் சட்டப்படி, 15 கிராமிற்கு மேல் போதைப்பொருளுடன் ஒருவர் பிடிபட்டால், அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். இந்த நிலையில், பன்னீர்செல்வம் 52 கிராம் ஹெராயின் கடத்தியதாக கைது செய்யப்பட்டதை அடுத்து, 2017 ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சூழலில், பன்னீர்செல்வம், தனக்கே தெரியாமல் யாரோ ஒருவர் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளதாகவும், எனவே தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை தடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்து வருகிறது.

ஆனால், அந்த கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்து விட்டதாகவும், இன்று தூக்கு தண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டில் மட்டும், சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நான்காவது தெற்காசியர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இருவருக்கும், கொலைக்கான குற்றச்சாட்டில் ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்