9,00,000 லிட்டர் டீசலுடன் மலேசிய கப்பல் கடத்தல்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2016 (14:36 IST)
மலேசியாவில் 9,00,000 லிட்டர் டீசலை எடுத்துச் சென்ற கப்பல் கடத்தப்பட்டதாக அந்நாட்டு கடல்வழி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 


மலேசியாவின் தஞ்சோங் பெலிபாஸ் துறைமுகத்தில் வீர் ஹர்மோனி கப்பல் நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. 9,00,000 லிட்டர் டீசல் கொண்ட ஆயில் டேங்கர் அந்த கப்பலில் இருந்துள்ளது. இதனிடையே கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட கப்பலானது இந்தோனேஷியாவில் உள்ள பாதாம் கடற்பகுதியில் நிற்கிறது என தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கப்பலில் இருந்த டீசலின் மதிப்பு சுமார் ரூ.2.62 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலை கடத்தியவர்கள் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்