தமிழக சட்டப்பேரவையில் இன்று நமக்கு நாமே பயணம் குறித்த அதிமுக உறுப்பினர் குணசேகரன் கருத்து கூறி இருக்கிறார். அந்த கருத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையை நடத்தவிடாமல், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டதால், சபாநயகர் தனபால் திமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். அவர் உத்தரவின் பேரில் திமுகவினரை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். ஸ்டாலின் உட்பட அனைத்து திமுக உறுப்பினர்களையும் அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியே தூக்கி வந்துவிட்டனர்.
இதை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த, ஸ்டாலின், ”மானிய கோரிக்கை விவாதத்தில் நாங்கள் கலந்து கொள்ள கூடாது என்று அதிமுகவினர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினர்.” என்றார்.