மாயமான மலேசிய விமானம் முழுவதும் குண்டு துளைக்கப்பட்டதா??

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (16:08 IST)
கடந்த 2014 ஆம் ஆண்டு எம்.எச் 370 விமானம், கோலாலம்பூரில் இருந்து, பீஜிங் நோக்கி 293 பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த போது மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று பின்னர் கைவிடப்பட்டது. 
 
இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் மலேசிய விமானத்தின் பாகங்களை கூகுள் எர்த் மூலம் கண்டுபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அந்த இளைஞர் கூறியதாவது, விமானம் இருக்கும் இடம் மொரிஷியஷில் இருந்து 22.5 கிமீட்டர் தொலைவில் 16 கி.மீ தெற்கில் உள்ள ரவுண்ட் தீவை காட்டுகிறது. இந்தத் தீவில் இதுவரை விமானம் மாயமானது குறித்து தேடுதல் நடத்தப்பட வில்லை. 
 
அதோடு, அமெரிக்கா அதிகாரிகள் சரியான தேடுதல் வேட்டையை நடத்தவில்லை, இந்த பகுதியில் தேடுதல் நடத்தவும் மறுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார். தேடுதல் பணிக்கு அனுப்பட்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை. 
 
மாயமான விமானம் முற்றிலும் குண்டுகளால் துளைக்கப்பட்டிருந்தது எனவும் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த இளைஞரின் கணக்கு படி விமானம் புறப்பட்ட 6 மணி நேரத்திற்கு பிறகு இந்திய பெருங்கடலில் விழுந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்