கரும்பலகையில் கணினி வரைந்த ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்களை வழங்கிய இந்தியா நிறுவனம்

ஞாயிறு, 18 மார்ச் 2018 (14:24 IST)
மேற்கு ஆப்பரிக்கா கானாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கணினி இல்லாமல் கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்தினார்.

 
கணினி இல்லாத காரணத்தினால் ஆசிரியர் ரிச்சார்ட் அபியாக் அகோடோ கரும்பலைகையில் வோர்ட் எப்படி செயல்படுகிறது என்பதை வரைந்து பாடம் நடத்தினார். இவர் பாடம் நடத்தியது சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் வைரலாக பரவியது. 
 
இந்நிலையில் இந்திய நிறுவனம் கம்ப்யூட்டர்களை வழங்கி உதவியுள்ளது. பள்ளிக்கு 5 கம்ப்யூட்டர்கள், 1 லேப் டாப் வழங்கியுள்ளது. இதுகுறித்து அக்ராவில் உள்ள என்ஐஐடியின் தலைமை மேலாளார் அஷிஷ் குமார் கூறியதாவது:- 
 
இதுதொடர்பான வீடியோ பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை நாங்கள் பார்த்தோம். பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விவகாரத்தில் ஆசிரியரின் அர்ப்பணிப்பை பார்த்து மிகவும் மகிழ்ந்தோம். 
 
ஒரு ஐ.டி. பயிற்சி நிறுவனமாக நாங்கள் பள்ளிக்கு உதவியை செய்ய முடிவு செய்தோம் என கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்