48 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள்: வடகொரியா தூதரக அதிகாரிகளுக்கு மலேசிய அரசு உத்தரவு

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (06:58 IST)
48 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள்: வடகொரியா தூதரக அதிகாரிகளுக்கு மலேசிய அரசு உத்தரவு
மலேசியாவில் உள்ள வடகொரியா தூதர்கள் 48 மணி நேரத்திற்குள் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த வட கொரியாவை சேர்ந்த முன் சோல் மியோங் என்பவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்த நிலையில் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டது
 
இதனை அடுத்து மலேசிய நீதிமன்றம் அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்திரவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வட கொரியா, மலேசியா உடனான தூதரக உறவைத் துண்டிப்பதாக அறிவித்தது 
 
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மலேசிய அரசு வடகொரிய தூதரக தூதரக ஊழியர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது மேலும் வடகொரியாவின் இந்த நடவடிக்கையை நட்பற்றது என்றும் மலேசிய அரசு கண்டனம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்