மறுபடியும் 2 கோடி மாணவிகள் பள்ளி செல்ல முடியாது! – மலாலா வருத்தம்!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:24 IST)
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலால் 2 கோடி பெண்களின் கல்வி பாதிக்கும் அபாயம் உள்ளதாக மலாலா தெரிவித்துள்ளார்.

பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்ததால் தலீபான்களால் சுடப்பட்டு உயிர் பிழைத்தவர் மலாலா யூசுப்சாய். தொடர்ந்து பெண் குழந்தைகள் கல்விக்காக குரல் கொடுத்து வரும் இவர் அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றுள்ளார்.

தற்போது ஐநா சபை கூட்டத்தில் பேசியுள்ள இவர் கொரோனாவினால் உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஒட்டு மொத்த கல்வி முறையிலும் பெரும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரும் கூட பல்வேறு காரணங்களால் 2 கோடி மாணவிகள் பள்ளிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்படும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளாக பெண் குழந்தைகள் கல்விக்காக பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் பெரிய அளவு முன்னேற்றங்களை எட்டுவது இன்னமும் சவாலாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்