சென்னையில் இன்று ஒரே நாளில், இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்றைய மாலை நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 86,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10,770-க்கு விற்கப்படுகிறது.
காலையில் ஒரு சவரனுக்கு ரூ. 480 உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ரூ. 560 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.1040 உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயர்வு, தங்கம் வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.