இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 353 ரன்கள் எடுத்துள்ளது.
நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் இன்று காலையில் சதம் அடித்த உடனேயே பும்ராவின் பந்தில் அவுட் ஆனார். அதன் பிறகு, ஹாரி ப்ரூக், கிரிஸ் வோக்ஸ் ஆகியோர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், தற்போது ஸ்மித் மட்டுமே தனியாளாக போராடி வருகிறார்.
இந்திய அணியின் சார்பில் பும்ரா அபாரமாகப் பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும், நிதிஷ் குமார் ரெட்டி இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
ஸ்மித் மட்டும் அவுட் ஆகிவிட்டால், அதன் பிறகு இரண்டு விக்கெட்டுகள் மிக எளிதில் விழுந்துவிடும் என்றும், 400 ரன்களுக்குள் இங்கிலாந்து அணியை சுருட்டி விடலாம் என்றும் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.