கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மரணம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் மரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த மன்சூர் அலிகான் “அந்த மக்கள் சாகும்போது எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்பதை நினைத்து எனக்கு தூக்கமே இல்லை. இந்த கொலையை என்ன அரசியல் ஆக்குவது? அதுதானே உண்மை.
அவருடைய வளர்ச்சி பிடிக்காமல் இருப்பவர்கள் அவரை கொள்கை ரீதியாக எதிர்த்து நில்லுங்கள், கூட்டம் போட்டு பதில் சொல்லுங்கள். மக்கள் உயிரில் விளையாடாதீர்கள். ஐ சப்போர்ட் விஜய். நீங்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். மற்றவற்றை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
ஒரு மாநாட்டிற்கு அனுமதி கேட்கும்போது 28 கண்டிஷன் போடும் காவல்துறை, மக்களுக்கான பாதுகாப்பை அவர்கள்தானே உறுதிப்படுத்த வேண்டும். எதற்காக முட்டுச்சந்து போன்ற இடத்தை ஒதுக்குகிறீர்கள். இதுபற்றி விஜய்யே ஒரு பிரச்சாரத்தில் பேசினாரே. என்ன கேட்டார். மக்கள் வந்து நின்று பார்த்து செல்ல விசாலமான ஒரு இடம்தானே கேட்டார். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு. காவல்துறை பாவம் என்ன செய்வாங்க? மேலே இருந்து வரும் உத்தரவுகளைதான் அவங்க பின்பற்ற முடியும்.
மக்கள் விஜய்யை பாக்க வறாங்க. ஆனா இதுக்கு பின்னாடி ஒரு சதி நடந்திருக்கு. புதுசா ஒருத்தர் வரும்போது அவரை நின்று சமாளிக்க முடியாமல் சொந்த மக்களையே கொன்று வேஷம் போட்டுட்டு இருக்கீங்களே” என ஆவேசமாக பேசியுள்ளார்.
விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு கோபமாக பேசிய அவர் “விஜய் மீது முடிந்தால் கை வைத்து பாருங்கள். அப்போது தமிழ்நாடு என்ன ஆகுதுன்னு பாருங்க” என பேசியுள்ளார். மேலும் இறந்தவர்களை உடனே பிரேத பரிசோதனை செய்தது என்ன உண்மையை மறைப்பதற்காக? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Edit by Prasanth.K