30 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டியெடுக்கப்பட்ட டயானாவின் பேழை.. என்னென்ன பொருட்கள் இருந்தது?

Mahendran

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (12:01 IST)
பிரிட்டன் இளவரசி டயானா காலமான 30 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் லண்டனில் உள்ள கிரேட் ஓர்மண்ட் ஸ்ட்ரீட் குழந்தைகள் மருத்துவமனையில் புதைத்த ஒரு அரிய காலப் பேழை கண்டுபிடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. 
 
இளவரசி டயானா, 1989 முதல் 1997-ஆம் ஆண்டு அவர் உயிரிழக்கும் வரை இந்த மருத்துவமனையின் தலைவராக செயல்பட்டார். அவர் தனது மகன்களான வில்லியம் மற்றும் ஹாரியுடன் பல முறை இந்த மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். 
 
1991-ஆம் ஆண்டில் மருத்துவமனையின் வெரைட்டி கிளப் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, அந்த அடித்தளத்தில் ஈயத்தால் பூசப்பட்ட ஒரு மரப்பெட்டி வடிவ கால பேழையை புதைத்தார். இது பல ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் இருந்தது. இப்போது புதிய மருத்துவமனை கட்டிடத்துக்கான கட்டுமான பணியின் போது, இந்தக் காலப் பேழை தற்செயலாக கண்டெடுக்கப்பட்டது.
 
இந்தபேழையின் உள்ளே இருந்த பொருட்கள் பின்வருமாறு:
 
ஒரு பாக்கெட்டில் வைக்கக்கூடிய கையடக்க தொலைக்காட்சி
 
பாடகி கைலி மினோக்கின் 'Rhythm of Love' சிடி
 
ஒரு ஐரோப்பிய பாஸ்போர்ட்
 
மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள்
 
பிரிட்டிஷ் நாணயங்கள்
 
ஒரு பனித்துளி ஹாலோகிராம்
 
கியூ கார்டன்ஸ் மர விதைகள்
 
சூரிய ஆற்றலில் இயங்கும் கால்குலேட்டர்
 
அன்றைய 'டைம்ஸ்' நாளிதழின் நகல்
 
இளவரசி டயானாவின் படம்
 
30 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டபோதிலும், பெரும்பாலான பொருட்கள் நல்ல நிலையில் இருந்தன. சில பொருட்களில் மட்டும் லேசான நீர் சேதம் இருந்தது என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்