7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்.. லண்டனில் சிறை வைத்த போலீஸார்

Webdunia
ஞாயிறு, 21 ஜூலை 2019 (11:23 IST)
7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாயின் வழக்கை விசரித்த லண்டன் கோர்ட்டு, 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் லண்டன் நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினரான ஷாலினா பத்மநாபன் என்பவர் பல வருடங்களாக தனது கணவருடன் கருத்தரித்தல் சிகிச்சை செய்து வந்தார். இதன் பலனாக ஷாகன் என்ற பெண் குழந்தையை பெற்றார். ஆனால் அந்த குழந்தை குறை பிரசவத்தால் பிறந்ததாலோ என்னவோ, பிறந்து 4 மாதங்கள் வரை பல்வேறு சிகிச்சைகள் தேவைப்பட்டது. இதனால் குழந்தை வீட்டிற்கு அழைத்துவரப்படாமல் மருத்துவமனையிலேயே இருந்துவந்தது. அதன் பிறகு குழந்தை வீடு திரும்பிய பின்னரும் குழாய் மூலம் உணவு செலுத்தும் நிலையே ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு குழந்தைக்கு 7 மாதங்கள் ஆன நிலையில் திடீரென அந்த குழந்தை இறந்துபோனது. பின்பு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் குழந்தையின் மண்டை ஓட்டில் 2 இடங்களில் எலும்பு முறிவும், கால்களில் எலும்பு முறிவும் இருந்தது தெரியவந்தது. இது குறித்து குழந்தையின் தாயார் ஷாலினாவை போலீஸார் விசாரித்தனர். முதலில் உண்மையை மறைத்த ஷாலினா, பின்னர் தன்னுடைய குழந்தை வலிமையான குழந்தை இல்லை எனவும், தனக்கு வலிமையான குழந்தைதான் வேண்டும் என விருப்பட்டதால், குழந்தையை சுவரில் வீசியும், கால்களை முறித்தும் கொன்றதாகவும் அந்த விசாரணையில் கூறினார். அதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு ஷாலினாவுக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்