'லிப்லாக்' முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலி!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (12:35 IST)
சீன நாட்டில் 10 நிமிடங்களுக்கு தொடர்ந்து தன் காதலுக்கு லிப்லாக் கொடுத்ததால், அவர் காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சீன நாட்டைச் சேர்ந்த காதலவர்கள் இருவரும் கிழக்கு ஜெஜியாங் என்ற மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்குச் சென்றனர்.

அப்போது, காதலவர்கள் தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளும்பொருட்டு இருவரும் லிப்லாக் எனும் உதட்டோடு உதடு ஒட்டி முத்தமிட்டனர்.

இந்த முத்தம் இடைவிடாமல் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு நீண்டதாகக் கூறப்படுகிறது. இதில், காதலியின் காது அடைப்பது போன்ற வலி ஏற்பட்டதாக காதலனிடம் கூறியுள்ளார்.

பின்னர், காதலியின் காது கேட்கும் திறனும் குறைந்ததால் ஒருவரும் மருத்துவர் ஒருவரிடம் சென்று பரிசோதனை மேற்கொண்டனர்.

அதன்பின்னர், லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, காதிற்குள் காற்றழுத்தால் ஏற்பட்ட மாற்றத்தால் மெல்லிய சவ்வு பகுதியில் 2 துளைகள் ஏற்பட்டதாகக் கூறியதாகவும் இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்